திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியை பணி செய்ய விடாமல் தரக்குறைவாக பேசி வசை பாடிய வழக்கறிஞர் கைது.

திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியை பணி செய்ய விடாமல் தரக்குறைவாக பேசி வசை பாடிய வழக்கறிஞர் கைது.;

Update: 2025-07-01 07:21 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியை பணி செய்ய விடாமல் தரக்குறைவாக பேசி வசை பாடிய வழக்கறிஞர் கைது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சாய்பாபா நகர் பகுதியில் வசிப்பவர் வழக்கறிஞர் தணிகாசலம். இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் தொண்று தொட்டு இருந்து வருவதால் இவருக்கு கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் எடுத்த ஒரு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வாதாடும் போது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியை பணி செய்ய விடாமல் அவதூறாக பேசி வசை பாடிய சம்பவத்தால் அதிருப்தி அடைந்த குற்றவியல் நீதிபதி சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தணிகாசலம் மீது புகார் அளித்ததின் அடிப்படையில் திருப்பத்தூர் நகர காவல் துறை வழக்கறிஞர் தணிகாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News