கால்நடைகளுக்கு முகாமில் தவறாமல் கோமாரி தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்,
கால்நடைகளுக்கு முகாமில் தவறாமல் கோமாரி தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்,;
திருப்பத்தூர் மாவட்டம் கால்நடைகளுக்கு முகாமில் தவறாமல் கோமாரி தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆட்சியர் வேண்டுகோள், திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP) ஏழாம் கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசிபணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 02.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெறவுள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு. கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும். பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது. குளிர் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நகைளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீர், உமிழ்நீர், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1 இலட்சத்து 20 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஏழாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் வரும் ஜூலை 2 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை-22 ஆம் தேதி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது. கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளமாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.