திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட்டில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சாலை மறியல்
திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்கடு அருகே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நகராட்சி நிருவாகத்தை கண்டித்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு!;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்கடு அருகே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நகராட்சி நிருவாகத்தை கண்டித்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது . இந்த காய்கறி மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றது இந்த காய்கறி மார்க்கெட் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் தினம் தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர் விவசாயிகள் தினம் தோறும் காய்கறிகளை மார்கட்டுற்கு வந்து விற்பனை செய்து வருகின்றனர் இந்நிலையில் இன்று மார்கட்டில் போதிய இடம் வசதியில்லாததால் நகராட்சி நிர்வாகத்திற்கு 50 ரூபாய் சுங்க கட்டணம் கட்டி விவசாயிகள் சாலை ஓரம் காய்கறிகளை வியாபாரிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர் இந்நிலையில் நகராட்சி பணியாளர்கள் சாலை ஓரம் கடைகளை போடக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் திருப்பத்தூர் வாணியம்பாடி செல்லும் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர போலீசார் மறியலில் ஈடுபட்டுவருவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலைகைவிட்டு சென்றனர் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது