வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் தோல்களை ஏற்றிக்கொண்டு லிப்டில் சென்ற கூலித் தொழிலாளி லிப்ட் பழுதாகி உயிரிழப்பு..

வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் தோல்களை ஏற்றிக்கொண்டு லிப்டில் சென்ற கூலித் தொழிலாளி லிப்ட் பழுதாகி உயிரிழப்பு..;

Update: 2025-07-04 12:14 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் தோல்களை ஏற்றிக்கொண்டு லிப்டில் சென்ற கூலித் தொழிலாளி லிப்ட் பழுதாகி உயிரிழப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்தவர் கலீம் (38) இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை உள்ள நிலையில், கலீம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள (முஸப் லெதர் ஃபினிஷர்ஸ்) என்ற தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில் இன்று பணிக்கு வந்த கலீம் தோல் பொருட்களை தொழிற்சாலையில் உள்ள லிப்டில் ஏற்றிக்கொண்டு மேல்மாடியிற்கு சென்றுள்ளார், அப்பொழுது திடீரென லிப்ட் பொழுதாகி மேலிருந்து கீழே விழுந்துள்ளது, இதில் லிப்டில் இருந்து கலீமிற்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரை சக பணியாளர்கள் மீட்டு சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் கலீமின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Similar News