சேலம் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள்

ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு;

Update: 2025-07-08 03:03 GMT
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சுகாதார வளாகம், 47-வது வார்டு அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பாதுகாப்பு அறை கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் 60-வது வார்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், நெத்திமேடு, செவ்வாய்பேட்டை பிரதான சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு நடத்தினார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Similar News