சேலத்தில் மாநில டேபிள் டென்னிஸ் போட்டி

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு;

Update: 2025-07-08 03:05 GMT
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் அசோசியேசன், சேலம் மாவட்ட டேபிள் டென்னிஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் ஆகியவை இணைந்து மாநில அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியை சேலம் அழகாபுரம் நகரமலை சாலையில் அமைந்துள்ள எஸ்.கே.ஜே. டேபிள் டென்னிஸ் அகாடமியில் நடத்தின. 3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தொழில் அதிபர்கள் செந்தில், நாகப்பன், டாக்டர்கள் சதீஷ்குமார், அஸ்வின் ராவ், வித்யாசாகர் மற்றும் கண்ணபிரான் ஆகியோர் கலந்து கொண்டு மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு மற்றும் கோப்பை வழங்கினர்.

Similar News