சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில்

தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்;

Update: 2025-07-10 08:28 GMT
சேலம் பெரிய சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் 10 நாட்கள் நடைபெற்றது. இதில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ படையின் 535 மாணவ-மாணவிகள், 10 தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தை சேர்ந்த 25 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு கோவை மண்டல தலைமை அதிகாரி கர்னல் ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து ெகாண்டு புதிதாக அமைக்கப்பட்ட தடை ஓட்ட பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். இந்த தடை ஓட்ட பயிற்சி மையத்தை சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டத்தோ எஸ்.சரவணன் அமைத்து கொடுத்ததுடன், பயிற்சி பெற்ற தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களையும் ஏற்பாடு செய்திருந்தார். முகாமின் நிறைவு நாளில், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் ஏ.நாகப்பன் தலைமை விருந்தினராக பங்கேற்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். பல்கலைக்கழக இயக்குனர் (அட்மிஷன்ஸ்) எஸ்.சந்தானலட்சுமி என்ற சாந்தி, விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.சசிகுமார் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். முகாமில், தமிழ்நாடு 11 சிக்னல் கம்பெனியின் தேசிய மாணவர் படை தலைமை அதிகாரி கர்னல் சுராஜ் எஸ்.நாயர் தலைமை தாங்கி பேசினார். இதில், கல்லூரி துணை முதல்வர் எம்.நித்யா, கிருபானந்த வாரியார் நிர்வாக குழு உறுப்பினர்கள் என்.ராஜன், எஸ்.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் எஸ்.கண்ணன், பல்வேறு கல்லூரிகளின் தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Similar News