சேலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரி;
சேலம் கோட்டை மைதானத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், ஜான் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.