கொண்டலாம்பட்டி அருகே ஓட்டல் ஊழியரை செல்போனில் அழைத்து வழிப்பறி
3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு;
சேலம் அம்மாபேட்டை பகுதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 26). இவர் ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் செல்போன் மூலம் பேசி பழக்கம் ஏற்பட்ட நபர் ஒருவர், உடனே வரும்படி அழைத்துள்ளார். இதனை நம்பிய கார்த்திகேயன் அந்த நபரை தேடி பிள்ளையார் நகர் பகுதி பருப்பு குடோன் அருகே சென்றுள்ளார். அங்கே சென்றவுடன் அந்த நபருடன் மேலும் 2 பேர் இருந்துள்ளனர். இதனிடையே அவர்கள் 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயனை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி செயின் மற்றும் இடுப்பில் அணிந்திருந்த அரைஞாண் கொடி மற்றும் அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்து 700-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.