உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்

கலெக்டர் ஆய்வு;

Update: 2025-07-10 08:43 GMT
உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று முகாமிற்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. சேலம் அழகாபுரத்தில் விண்ணப்பம் வழங்கும் பணியை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத்தகுதி உள்ள விடுபட்ட பெண்கள் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பம் அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் இந்த முகாம்களில் மட்டும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் என நகர்புற பகுதிகளில் 460 ஊரக பகுதிகளில் 701 தன்னார்வலர்கள் என மொத்தம் 1,161 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று கூறினார். இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News