சேலம் அருகே உலகப்பனூரில் தார்சாலை அமைக்க பூமி பூஜை
செல்வகணபதி எம் பி கலந்து கொண்டார்;
சேலம் மேற்கு மாவட்டம் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் திறப்பு மற்றும் மகுடஞ்சாவடி சுப்பிரமணிய சாமி கோவில் தேர் பணி ஆய்வு, உலகப்பனூரில் தார்சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் சுப்பிரமணியசாமி தேர் பணியை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சம் மதிப்பில் உலகப்பனூர் முதல் சந்தைப்பேட்டை வரை தார்சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் வரவேற்றார். இதில் மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மாணவர் அணி அமைப்பாளர் கண்ணன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.