சேலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ரேஷன் கடை ஊழியர் பலி
போலீசார் விசாரணை;
சேலம் மாவட்டம் பூலாவரியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 38), ரேஷன் கடையில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நெய்க்காரப்பட்டி இளங்தோப்பு அருகே சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற சைக்கிளும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது மோகன்ராஜ் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. சைக்கிளில் சென்றவர் பலத்த காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார்? என்று தெரிய வில்லை. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.