சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்

கூடுதல் இயக்குனர் பங்கேற்பு;

Update: 2025-07-12 03:39 GMT
சேலம் மாவட்ட உழவர் நலத்துறை சார்பில் அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்திற்குட்பட்ட பெரியகவுண்டாபுரத்தில் உழவரை தேடி வேளாண்மை என்ற தலைப்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மஞ்சுளா தலைமை தாங்கினார். கூடுதல் இயக்குனர் சாந்தா செலின் மேரி கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து விவசாயிகளுக்கு பழச்செடிகள், காய்கறி விதை தொகுப்புகளை வழங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சின்னனூரில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Similar News