சேலம் மாநகராட்சி பகுதியில் மஞ்சப்பை விநியோகம்
அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்பு;
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்தில் 34-வது வார்டு புதுத்தெரு திப்பு நகர் பகுதியில் நகர்ப்புற மக்கள் தூய்மை என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு வீடு, வீடாக நடந்து சென்று பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 34-வது வார்டு முழுவதும் வீடு, வீடாக மாநகராட்சி அலுவலர்கள் சென்று பொதுமக்களிடம் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.