சேலத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்;
சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இணை செயலாளர் பாலாஜி, ராஜ்குமார், சுப்ரமணியம், கோவிந்தசாமி உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 4 தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.