சேலம் அருகே அரசு பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம்:
கைதான ஆசிரியர் பணி இடைநீக்கம்;
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளிடம் ஆசிரியர் தங்கவேல் என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் தங்கவேலை கைது செய்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தங்கவேலை பணி இடைநீக்கம் செய்து தாரமங்கலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராசு உத்தரவிட்டார்.