ஏற்காட்டில் தேசிய, மாநில சிலம்பாட்ட நடுவர்களுக்கான பயிற்சி முகாம்

இந்திய சிலம்ப சம்மேளன தலைவர் முத்துராமன்ஜி பங்கேற்பு;

Update: 2025-07-16 07:45 GMT
இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து தேசிய, மாநில அளவிலான நடுவர் பயிற்சி முகாமை சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2 நாட்கள் நடத்தின முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய சிலம்ப சம்மேளன தலைவர் முத்துராமன்ஜிக்கு ஆளுயர மாலை, கிரீடம் அணிவித்து கவுரவிக்கப்பட்டதுடன், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட தேசிய, மாநில நடுவர்களுக்கு தேசிய துணைத்தலைவர் ரத்தினகுமார், தேசிய நிர்வாக செயலாளர் ஜலேந்திரன், முதன்மை போட்டி இயக்குனர் நடராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஏற்காடு சித்ரா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிலம்பாட்ட விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை பயிற்சி முகாமில் வெளியிட்டார். அதனை இந்திய சிலம்ப சம்மேளன தலைவர் முத்துராமன்ஜி பெற்றுக்கொண்டார். பயிற்சி முகாமில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தேசிய நடுவர்கள் 47 பேரும், தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் இருந்து 157 மாநில நடுவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் தமிழ்செல்வி, மாநில இணை செயலாளர் ராஜா, தேசிய ஒருங்கிணைப்பாளர் குமரமணிகண்டன், துணைத்தலைவர் சுப்பையா மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News