சேலத்தில் லாரி டிரைவர் மயங்கி விழுந்து சாவு

போலீசார் விசாரணை;

Update: 2025-07-17 08:52 GMT
மதுரை, மேல வைத்தியபுரம், ரோஜா குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 43). நாமக்கல்லை சேர்ந்தவர் அன்பரசன். லாரி டிரைவர்கள். இவர்கள் நாகப்பட்டினத்தில் இருந்து உப்பு பாரம் ஏற்றுக் கொண்டு பெங்களூருக்கு சேலம் வழியாக சென்றனர். ஓமலூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது டிரைவர் முருகன் திடீரென லாரியிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட மாற்று டிரைவர் அன்பரசன், முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிேசாதித்தபோது முருகன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News