சேலம் அஸ்தம்பட்டி மண்டல பகுதியில்‘ உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

மேயர் ராமச்சந்திரன் ஆய்வு;

Update: 2025-07-18 03:26 GMT
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 4 மற்றும் 5-வது வார்டு பகுதி மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் வழங்கினர். மேலும் பலர் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இந்த முகாமை மேயர் ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, உதவி ஆணையாளர் லட்சுமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் கோரிக்கை மனு வழங்கியவர்களிடம் விவரம் கேட்டறிந்தனர்.

Similar News