காரிமங்கலம் காவலர்களுக்கு தர்மபுரி எஸ்பி பாராட்டு
காணாமல் போன சிறுவனை மீட்ட காரிமங்கலம் காவலர்களுக்கு தர்மபுரி எஸ்பி பாராட்டு;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் குட்டூர் சிவக்குமாரின் மகன் நவீன், நேற்று மாலை சிவக்குமாரின் தந்தை சின்னசாமி, பேரன் நவீனை அழைத்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்த போது நவீனை,தவறவிட்டுள்ளார் இதனால் சின்னசாமி அதிர்ச்சியடைந்து புலம்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், எஸ்ஐ சுந்தரமூர்த்தி, ஆகியோர், உடனடியாக பேருந்து நிலையத்திற்கு விரைந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தேடி, மாயமான சிறுவனை அரை மணி நேரத்தில் மீட்டு சின்னசாமியிடம் ஒப்படைத்தனர். அரைமணி நேரத்தில் சிறுவனை மீட்ட காவலர்களை, எஸ்பி மகேஸ்வரன் இன்று பாராட்டினார்.