மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரியை சந்தித்த நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் !
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் நிதி அமைச்சகத்திடம் உடனடியாக நிதியை விடுவித்து ஒப்பந்தம் கோருவதற்கு ஆவண செய்யுமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.;
நாமக்கல் கருங்கல்பாளையம் பகுதியில் தொடர் விபத்து ஏற்படுவதன் காரணமாக உடனடியாக மேம்பால பணிகளை துவங்க வேண்டும் என்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சருடன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் எம்பி நேரில் சந்தித்து நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலை, பொம்மைகுட்டைமேடு மற்றும் கருங்கல்பாளையத்தில் அமைய உள்ள மேம்பாலம் மற்றும் பொம்மைகுட்டைமேடு முதல் செல்வம் கல்லூரி வரை இணைப்பு சாலை நிர்வாக அனுமதி வழங்கிய நிலையில் உடனடியாக ஒப்பந்தம் கோருவதற்கு (டெண்டர்) பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள் நிதி அமைச்சகத்திடம் உடனடியாக நிதியை விடுவித்து ஒப்பந்தம் கோருவதற்கு ஆவண செய்யுமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் விரைவில் பணிகள் துவங்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.