குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஆலத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெற்றது;
ஆலத்தூரில் குடியரசு தின தடகள போட்டி பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஆலத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவினர்களுக்கு தனித்தனியே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.