ஜெயங்கொண்டம் அருகே காதலியின் தற்கொலை செய்தி கேட்டு காதலனும் தற்கொலை போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம் அருகே காதலியின் தற்கொலை செய்தி கேட்டு காதலனும் தற்கொலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
அரியலூர், ஆக.13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சுமத்ரா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுமத்ரா திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரியில் ரேடியாலஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் சுமத்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சுமத்ராவின் காதலன் யுவராஜ் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள யுவராஜ் உடலை கைப்பற்றி தா.பழூர் போலீசார் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.