மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (15.09.2025) நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டார். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகள் விரைவாக பரிசீலித்து தீர்க்கப்படும் எனவும் ஆட்சித்தலைவர் உறுதியளித்தார்.