தசரா திருவிழா – துறைசார் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்
குலசேகரபட்டிணம் தசரா திருவிழா – துறைசார் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (15.09.2025) குலசேகரபட்டிணம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான துறைசார் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி ஆர். ஐஸ்வர்யா, இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திருமதி சி. ப்ரியங்கா., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. ரா. கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.