பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பாமக தலைவராக அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்;

Update: 2025-09-16 01:48 GMT
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் தேர்தலில் வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அங்கீகாரத்தை அளிப்பதற்கு மருத்துவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரம் அளித்துள்ளது. இதனை வரவேற்று, நேற்று திங்கட்கிழமை மாலை தர்மபுரி மாவட்ட பாமக எம்எல்ஏவும் மேற்கு மாவட்ட செயலாளருமான வெங்கடேஷ்வரன் தலைமையில் மாவட்ட பாமக அலுவலகம் முன்பு பாட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர்கள் சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, பன்னீர்செல்வம், சுதாகிருஷ்ணன், மாம்பட்டி அன்பழகன், மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி, மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Similar News