தர்மபுரியில் பொறியாளர்கள் தினம் கொண்டாட்டம்
தர்மபுரியில் வருவான் வடிவேலன் கல்லூரியில் பொறியாளர்கள் தினம் கொண்டாட்டம்;
தர்மபுரி குண்டல்பட்டி பகுதியில் அமைந்துள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் பொறியாளர்கள் தினம் நேற்று திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது, இவ்விழாவில் வரவேற்புரையாக கல்லூரியின் முதல்வர் சிவகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், இதனை தொடர்ந்து கல்லூரியின் செயலாளர் மாது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார், அவர் பேசும் பொழுது பொறியாளர்களின் தன்மைகள் என்ன பொறியாளர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி இந்த வளர்ச்சிகள் மாணவர்கள் படிக்கும் பொழுது பொறியாளர்களின் குறிக்கோள் அடிப்படை தன்மைகள் என்ன என்பதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், நாட்டின் எதிர்காலம் மாணவர் கையில்தான் உள்ளது அதுவும் பொறியாளர்கள் கையில் தான் உள்ளது என்றும் விரிவாக பேசினார்.இதில்மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தியாகராஜன் மேற்பார்வை பொறியாளர் , ரவி நிர்வாக பொறியாளர் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். கல்யாணமான மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.