தர்மபுரியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்;

Update: 2025-09-17 02:12 GMT
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஷ் மற்றும் தர்மபுரி எம்பி. மணி ஆகியோர் இணைந்து 512 மகளிர் சுய உதவி குழுவினருக்கு 63.77 கோடி வங்கி கடன் காசோலைகளைகள், மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினர்

Similar News