உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் ஆய்வு
தின்னஹள்ளி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் சாலை திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி பள்ளி வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு செய்து விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா,உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்