பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை

தொடர்ந்து செல்போன் பார்த்ததால் பெற்றோர் கண்டிப்பு மாணவி தற்கொலை;

Update: 2025-09-17 06:59 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதிகோண்பாளையம் எம்.ஒட்டப்பட்டியை சேர்ந்த முருகன். இவரது மகள் வைஷ்ணவி அரசு பள்ளி யில் 10ம் வகுப்பு படித்து வந்தார். வைஷ்ணவி தொடர்ந்து செல்போனை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த சிறுமி, விஷம் குடித்து மயங்கினார். இதை கண்ட பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி வைஷ்ணவி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து மதிகோண்பாளையம் காவலர்கள் இன்று புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News