பெரியார் உருவ சிலைக்கு அதிமுகவின் மரியாதை
தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி பெரியார் உருவ சிலைக்கு தர்மபுரியில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 வதுபிறந்த நாளையொட்டி தருமபுரி நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன் தர்மபுரி நகர கழக செயலாளர் பூக்கூடை ரவி. பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் தர்மபுரி 5 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் அதற்கு கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்