தர்மபுரியில் கொட்டி தீர்க்கும் கனமழை
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை;
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை மாலை 4 மணி முதல் லளிகம் நல்லம்பள்ளி, பாளையம், சேசம்பட்டி, கெங்காலபுரம், அரூர், பொம்மிடி, கோவிலூர், பூதனஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் சாலையில் மழையால் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.