சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-09-17 13:45 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு சட்டமன்ற விதி எண்-110-ன் கீழ் அறிவிக்கையில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச்சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் “சமூக நீதி நாள்” ஆக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழியான, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும் - ” யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பு நெறியையும்,எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன் ! சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் ! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன் ! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்று அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாநகராட்சியில் செயல்படும் வேளாண்மைத்துறையின் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நாமக்கல் வட்டம், வகுரம்பட்டி கிராமத்தில் வனத்துறை பெயரில் நில மாறுதல் செய்வது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.சந்தியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ச.பிரபாகரன் உட்பட அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News