மோகனூர் பேரூர் தவெக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
மோகனூர் பேரூர் சார்பில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சார்பாக தந்தை பெரியாரின் 147 பிறந்தநாள் விழா மோகனூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.;
தமிழக வெற்றி கழக மக்கள் தலைவர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த், அவர்களின் ஆலோசனைப்படி தமிழக வெற்றிக் கழக நாமக்கல் மேற்கு மாவட்டம் ,மோகனூர் ஒன்றியம்,மோகனூர் பேரூர் சார்பில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சார்பாக தந்தை பெரியாரின் 147 பிறந்தநாள் விழா மோகனூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.இதில் மோகனூர் ஒன்றியம் வெங்கடாசலம், தங்கராஜ், ஆரோக்கியதாஸ்,மோகனூர் பேரூர் பொன் ஆரோன் ராஜா,இன்பசுதன், கோமதன்,தனுஸ், சரன், நாபின், அருண் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.