கோ-ஆப்டெக்சீல் தீபாவளி விற்பனை துவக்கம்

தருமபுரி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.ஒரு கோடியே 30 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம்;

Update: 2025-09-18 12:16 GMT
தருமபுரி நெல்லிக்கனிகோ ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை இன்று வியாழக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதிஷ் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு தீபாவளிக்கு புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சாவூர் பட்டு புடவைகள், மற்றும் கோவை, சேலம் திண்டுகல், திருச்சி பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் விற்பனைக்கு உள்ளன மேலும், கைத்தரி வேட்டி, துண்டு, சட்டை, படுக்கை விரிப்புகள், லுங்கி, காட்டன் சட்டைகள் ஜமக்காளம், மெத்தை கையுறைகள் உள்ளன தீபாவளி பண்டிகையொட்டி கைத்தரி ரகங்களுக்கு 30% சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை, 1கோடியே 30 இலட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் கோ. ஆப்டெக்ஸ் துணை மண்டல மேலாளர் செல்வி, விற்பனை நிலைய மேலாளர் ரெஜினா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Similar News