பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு நோட்டு பேனா வழங்கப்பட்டது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டநாச்சம்பட்டி பஞ்சாயத்தில்.;
உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு நோட்டு பேனா மற்றும் இனிப்பு பாரதிய ஜனதா கட்சி சார்பாக கட்டநாச்சம்பட்டி கிராம பாரதிய ஜனதா கட்சி சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது கட்டநாச்சம்பட்டி கிராம சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் எஸ். மணிகண்டன் மற்றும் வி. ராஜ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் எஸ். திவ்யா மற்றும் மாவட்ட துணைத் தலைவர் துணைத் தலைவர்கள் வி. சேதுராமன் மற்றும் எஸ். சித்ரா அவர்களும் இராசிபுரம் நகரைச் சேர்ந்த எஸ்.குமார் மற்றும் என்.தங்கவேலு ஜே.நாகராஜ் கட்டநாச்சம்பட்டி பகுதி நிர்வாகிகள் பழனிச்சாமி மற்றும் மேலும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்