தமிழகத்தில் போக்சோ வழக்குகள் படிப்படியாக குறைந்து வருகிறது,சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.

திருட்டு வழக்குகள் குறைப்பதற்கு பொதுமக்கள் சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும்.;

Update: 2025-09-18 15:20 GMT
நாமக்கல்லில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி அளித்தார் நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை காவல்துறையினர் கண்ணியமாக நடத்த வேண்டும், குற்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வழங்கினார். முன்னதாக காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதாகவும் தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி அலுவலகம் ஆய்வு செய்துள்ளதாகவும் இந்த ஆய்வில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணி தொடர்பான ஆலோசனை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். காவல்துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அவர், சமீபத்தில் காவலர்கள் மீது தாக்கப்படுவது குறித்த நிகழ்வுகள் நடைபெறவில்லை, தாக்குதல் போன்ற சம்பவம் நடந்தால் உரிய பாதுகாப்பும், நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்சோ வழக்குகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் நகை திருட்டு வழக்குகள் குறைப்பதற்கு பொதுமக்கள் சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு மக்கள் முன் வரவேண்டும் என தெரிவித்தார்.

Similar News