தூய்மை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-09-19 14:05 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தூய்மை திருவிழா, தூய்மையே சேவை -2025 நாமக்கல் மாவட்டத்தில் 17.09.2025 முதல் 02.10.2025 வரை நடைபெறுகிறது. சுத்தமான, பசுமையான விழாக்கள் மற்றும் கழிவுகள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழியான,சுத்தமே சுகாதாரம் என்பதை என் வாழ்வியல் வழிமுறையாய் கடைபிடிப்பேன். தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய வளர்ச்சியே எனது இலட்சியம். எனது அலுவலகத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வேன். அலுவலகத்தில் காகிதங்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்வேன். உணவருந்தும் இடம், கழிப்பறை ஆகியவற்றை முறையாக பயன்படுத்துவதோடு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைப்பு நல்குவேன்.மீதமான உணவுப்பொருட்களை தனியாக சேகரித்து உரிய முறையில் அப்புறப்படுத்துவேன். தூய்மையை பேணிக் காப்பது என் அலுவலகக் கடமைகளில் ஒன்றாகும் என்பதை நான் நன்கறிவேன். மேலும், தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தூய்மையை பேணிக் காக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்” என அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மா.லீலாகுமார் (வளர்ச்சி), வ.சந்தியா (பொது), க.இராமச்சந்திரன் (வேளாண்மை), உதவி இயக்குநர் (நில அளவை) இரா.ஜெயசந்திரன் உட்பட அனைத்துத் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News