ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்;
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரத்தினம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் பாத்திமா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.