புதிய ரயில் பாதையை மாற்று பாதையில் அமைக்க கோரிக்கை

தர்மபுரி-மொரப்பூர் புதிய ரயில் பாதையை மாற்றுப்பாதையில் அமைக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட கிராம மக்கள்;

Update: 2025-09-20 00:50 GMT
தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.ரெட்டி அள்ளி பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் தர்மபுரி-மொரப்பூர் புதிய ரயில் பாதை அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட ரயில்வே மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குழு வந்து அளவீடு செய்ய கடந்த15ம் தேதியன்று வந்திருந்தனர். எங்கள் கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வந்திருந்த அதிகாரிகளிடம் தயவு செய்து எங்கள் நிலத்தின் நடுவே இரயில்பாதை அமைக்க முயற்சிக்காமல் மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல அவர்கள் வேண்டிக்கேட்டுக் கொண்டதின் பேரில் இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்போம் என கூறி சென்றுவிட்டனர். ஏற்கனவே 1945-ஆம் ஆண்டு வாக்கில் சேலம் முதல் பெங்களூர் வரை அப்போதே ரயில் பாதை எங்கள் கிராமத்தின் தெற்கு மற்றும் மேற்கு புறத்தில் சுமார் 50 குடும்பங்களின் நிலத்தை ஆர்ஜிதம் செய்து பாதை அமைத்து தற்போது அது பயன்பாட்டில் உள்ளது. மேலும் கடந்த 2007- ஆம் ஆண்டு சேலம் முதல் கிருஷ்ணகிரி வரை புதிய தேசிய நான்கு வழிச்சாலை NH-44 அமைக்கப்பட்ட போதும் எங்கள் கிராம மக்கள் சுமார் 100 நபர்களின் இடங்கள் 70 ஹெக்டேர்க்கு மேல் பரப்பளவு உள்ள விவசாய நிலம், கிணறு, வீடு, நஞ்சை மற்றும் புஞ்சை நிலம், தோப்பு ஆகியவை இந்த நான்கு வழி சாலைகளுக்காக அரசாங்கம் எடுத்துக் கொண்டது. அது தற்போதைய விவசாய நிலத்தின் மதிப்பு ஏக்கர் 2 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. பழைய இரயில்வே பாதை எங்கள் கிராமத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. தற்போது தர்மபுரி மொரப்பூர் புதிய ரயில் பாதை எங்கள் கிராமத்திற்கு வடக்கு மேற்கு மற்றும் தெற்கு புறமாக யு வடிவில் குறியீடு செய்துள்ளனர். இந்த இரண்டு இரயில்பாதைக்கும் தடுப்பு சுவர் அமைப்பது போல எங்கள் கிராமம் ஒரு தீவு போல ஆகிவிடும். தற்போது அளவீடு செய்துள்ள இடத்தில் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், துவக்கப்பள்ளி, விநாயகர் கோவில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஆதிதிராவிடர் குடியிருப்பு மற்றும் எங்கள் கிராம விவசாய பெருங்குடி மக்களின் விவசாய நிலங்கள், வீடு, கிணறு பம்ப் செட் மரம் இவை அனைத்தும் பறிபோகும் சூழ்நிலையில் உள்ளது. இந்த விவசாயிகள் நிலத்தில் வரும் வருவாயை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நமது மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், நமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் மற்றும் சேலம் தெற்கு இரயில்வே கோட்ட அலுவலர், இரயில்வே கோட்ட மேலாளர் சம்மந்தப்பட்ட அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆகையால் எங்கள் கிராம பொதுமக்களின் நலன் கருதி எங்கள் மனுவினை பரிசீலித்து இந்த தர்மபுரி -மொரப்பூர் புதிய இரயில் பாதை எங்கள் பகுதி கிராமத்தின் வழியாக வருவதை தவிர்த்து மாற்று பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்

Similar News