ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தவெக சாா்பில் மனு.
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் மனு அளித்தனா்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டது. ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆரணி புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலையான காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் மனு அளித்தனா்.