பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர்
மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர்;
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் அடுத்த மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில், இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பன் மற்றும் ரோஜா பழனியப்பன் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். இதில் அறங்காவல் குழுத் தலைவர் மனோகரன் மற்றும் விழாக்குழுவினர் உட்பட பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.