லட்சுமி நாராயண சுவாமிக்கு சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதகப்பாடி லட்சுமி நாராயணா கோவிலில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம்;
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதகப்பாடி லட்சுமி நாராயணா திருக்கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்நப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட லட்சுமி நாராயணா பக்தர்களால் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.