ஒகேனக்கல்லில் குவிந்த பயணிகள் கூட்டம்
ஒகேனக்கல்லில் மஹாளய மாவாசை முன்னிட்டு குவிந்த பயணிகள் கூட்டம்;
தமிழகத்தில் இன்று மஹாளய அமாவாசை தினம் அனுசரிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு ஆற்றங்கரை பகுதிகளில் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கலில் காலை முதல் ஏராளமான பயணிகள் குவிந்தனர் முதலைப் பண்ணை அருகில் பொது மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக, ஓம குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்து, ஆற்றில் புனித நீராடி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ரோந்து பணியில் வருகின்றனர்