திருக்குறள் சொல்லும் தமிழ்நாடு வெல்லும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க.;
திருக்குறள் திருப்பணிகள் திட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்,தமிழ் வளர்ச்சித் துறை ஆணைக்கிணங்க மற்றும் நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர் முனைவர் கை . பெரியசாமி அவர்களின் முன்னிலையில், நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக முதன்மை கல்வி அலுவலகம் நேர்முக உதவியாளர் முனைவர் . சந்திரசேகரன் மற்றும் மேற்பார்வையாளர் வெண்ணந்தூர் வட்டார வள மையம் மா.சுந்தரராஜன் முன்னிலை வகுத்தனர்.இராசிபுரம் தமிழ்க் கழகம் சார்பில் ஐந்தாம் வார திருக்குறள் வகுப்பு நடைபெற்றது. கருத்தாளர் இராசிபுரம் தமிழ்க் கழகம் தலைவர் முனைவர் பி . தட்சிணாமூர்த்தி மற்றும் வாகை தமிழ் சங்கம் மனோஜ் குமார் சிறப்பாக பயிற்சி அளித்தனர். மேலும் இராசிபுரம் தமிழ்க் கழகம் செயலாளர் முனைவர் கை. பெரியசாமி , இணை செயலாளர் மா.இருசப்பன் , பொருளாளர் வீ. ரீகன் , மற்றும் இராசிபுரம் தமிழ்க் கழகம் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ம.சுதாகர் ஆகியோரின் முன்னெடுப்பில் வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.