அரூரில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்

முன்னாள் அமைச்சர் தலைமையில் திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்;

Update: 2025-09-22 02:56 GMT
தர்மபுரி மாவட்டம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அரூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு "ஓரணியில் தமிழ்நாடு" தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என உறுதிமொழி கூறினார். அவருடன் தர்மபுரி எம்பி மற்றும் திமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் இந்த உறுதிமொழியை ஏற்றனர். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்த இந்த தீர்மானம், கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

Similar News