ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்;
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று கொண்டார்கள். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித் தொகைகள், அரசு நலத்திட்ட உதவிகள் வேண்டி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 495 மனுக்கள் வரப்பெற்றன.இம்மனுக்கள் மீது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் அறிவுரை வழங்கினார்கள். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி IDBI வங்கி கிளை மூலம் CSR நிதியிலிருந்து 6 பள்ளி மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இன்று வழங்கினார்கள்.