ஓரணியில் தமிழ்நாடு' தீர்மானம் ஏற்பு பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம்.பி கே.ஆர் என் ராஜேஷ்குமார்.

மக்கள் போற்றும் திராவிட மாடல் நல்லாட்சி நடத்திடும் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க.;

Update: 2025-09-22 14:37 GMT
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்பு கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நானும் . ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களும் கலந்து கொண்டு 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்துள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள 'தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்' தீர்மானத்தை உறுதிமொழி ஏற்று உரையாற்றினோம்இக்கூட்டத்தில் மாவட்ட அவைதலைவர் சி.மணிமாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.இராமலிங்கம், கு. பொன்னுசாமி,மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி,நகர கழக செயலாளர்கள் துணை மேயர் செ.பூபதி, ராணா ஆனந்த்,திரு.சிவக்குமார், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

Similar News