பாலக்கோட்டில் ஏல சீட்டு நடத்தி பணம் மோசடி
பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி - பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்;
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மேல்தெருவை சேர்ந்தவர் செந்தில், இவர் பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் ஸ்ரீ படவட்டை அம்மன் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சிறு சேமிப்பு திட்டம், மாத தவனையில் பணம் கட்டுதல், மாத சேமிப்பு திட்டம், 50 ஆயிரம் முதல் 50 இலட்சம் வரையிலான ஏல சீட்டு என பல்வேறு நிதி திட்டங்களின் மூலம் சுமார் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பணம் கட்டி முதிர்ச்சி அடைந்தவர்களுக்கும், ஏலசீட்டு எடுத்தவர்களுக்கும் பணத்தை தராமல் இன்று, நாளை என வாய்தா கூறி இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்க்கு முன்னர் நிதி நிறுவன உரிமையாளர் செந்தில் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.இதனால் அதிர்ச்சி அடைந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தருமபுரி பொருளாதார குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தனர். ஆனால் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதால் நேற்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நிதி நிறுவன உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரக்கோரி புகார் மனு அளித்தனர்