காரிமங்கலத்தில் தேங்காய் விலை அதிகரிப்பு
காரிமங்கலம் வாரச்சந்தையில் வரத்து சரிவால் தேங்காய் விலை உயர்வு 27 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனை;
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திங்கட்கிழமை பிற்பகல் தோறும் தேங்காய் விற்பனைக்காக பிரத்யேகமாக சிறப்பு வார சந்தை நடைபெற்று வருகிறது நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற காரிமங்கலம் வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1,25,000 அளவிலான தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காய்களின் அளவைப் பொறுத்து ரூபாய் 23 முதல் 32 ரூபாய் வரையிலான விலையில் தேங்காய் விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மொத்த விற்பனை 27 லட்சமாக இருந்தது எனவும் வரும் வாரங்களில் தேங்காய் விலை இனியும் அதிகரித்து காணப்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்